மதுரையில் 147 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

Published Date: January 25, 2023

CATEGORY: CONSTITUENCY

 

மதுரை எஸ்.எஸ்.காலனி எம்.ஆர்.பி.மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் 147 பயனாளிகளுக்கு ரூ.18 .14 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:

முதலமைச்சர் ஸ்டாலின் தளபதியார் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்பு மதுரை மத்திய தொகுதியில் மட்டும் இன்று நடைபெறும் இந்த நிகழ்ச்சியோடு சேர்த்து மொத்தம் ஏழு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 1100 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மகளிர் சுதந்திரமாக செயல்பட்டு மேம்படவும் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றின் மீது தனி கவனம் செலுத்தி உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி அலுவலகத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். அனிஷ் சேகர், மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத்சிங், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் இரா. சௌந்தர்யா, மாநகராட்சி மண்டலத் தலைவர் பாண்டிச் செல்வி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Media: Maalai Murasu